சரக்குவேன் மோதி வாலிபர் பலி


சரக்குவேன் மோதி வாலிபர் பலி
x

குஜிலியம்பாறை அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலியானார்.

திண்டுக்கல்

கரூர் மாவட்டம் சின்னக்கவுண்டனூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). இவர் கரூரில் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், கரூரில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டு்ககல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கரும்பாறைபட்டி என்னுமிடத்தில் வந்தபோது, கரூர் நோக்கி சென்ற சரக்குவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், ஈரோட்டை சேர்ந்த சரக்குவேன் டிரைவர் கனகராஜ் (27) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story