மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வாலிபர் பலியானார்.
விராலிமலை:
விராலிமலை தாலுகா பாப்பாப்பட்டியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 33). டிரைவர். இவர், இன்று வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தனது உறவினர் ஆறுமுகம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். விராலிமலையை அடுத்த மணமேட்டுப்பட்டி அருகே வந்தபோது எதிரே மணப்பாறை நோக்கி சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரத்குமார், ஆறுமுகம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சரக்கு வேன் டிரைவர் ராஜாளிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மாசிலாமணி (34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.