தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சேத்தியாத்தோப்பு அருகே தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோவிந்தராஜன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 40). தச்சு தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஈஸ்வரி தனது குழந்தைகளை பள்ளியில் படிக்க வைப்பதற்காக சேத்தியாத்தோப்பில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். கோவிந்தராஜன் பேட்டையில் தச்சு வேலை செய்து வரும் சரவணன் தினமும் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 4-ந் தேதி இரவு குடிபோதையில் தொலைபேசியில் மனைவியிடம் தொடர்பு கொண்டு சொந்த ஊரிலேயே தங்கி விடலாமா என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சரவணன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பாா்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.