தூக்குப்போட்டு தச்சு தொழிலாளி தற்கொலை
வேலூரில் தூக்குப்போட்டு தச்சு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் பகவதிபுரம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் லோகேஷ் (வயது 29), தச்சு தொழிலாளி. இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு லோகேஷ் அழைத்துள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரமறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் லோகேஷ் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.