புல்லூர் தடுப்பணையில் மூழ்கி தச்சுத்தொழிலாளி பலி
புல்லூர் தடுப்பணையில் குளிக்கச் சென்ற தச்சுத்தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
திருப்பத்தூர்
தச்சுத்தொழிலாளி
வாணியம்பாடியை அடுத்த சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). தச்சுத்தொழிலாளியான இவர் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் கனகநாச்சி அம்மன் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்றார்.
பின்னர் அங்குள்ள பாலாற்று தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தார். திடீரென கோவிந்தராஜ் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கிய அவரை நண்பர்கள் தேடினர்.
இது குறித்து போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு சென்று தடுப்பணையில் மூழ்கிய கோவிந்தராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பிணமாக மீட்பு
அப்போது அவர் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story