மோட்டார் சைக்கிள் மோதி தச்சு தொழிலாளி சாவு
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தச்சு தொழிலாளி சாவு
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரை சேர்ந்தவர் முருகையன் (வயது 51). தச்சு தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்து அண்டர்காடு மெயின் ரோட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த சாலையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள், முருகையன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story