2 கடைகள் மீது மோதிய கியாஸ் சிலிண்டர் லாரி
2 கடைகள் மீது மோதிய கியாஸ் சிலிண்டர் லாரி
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் பகுதியில் அடுத்தடுத்து 2 கடைகள் மீது கியாஸ் சிலிண்டர் லாரி மோதியது. அதிர்ஷ்டவசமாக கியாஸ் கசியாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கியாஸ் சிலிண்டர் லாரி
உடுமலையில இருந்து பழனிக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை ஆறுமுகம் ஓட்டி வந்தார். இந்த லாரி மடத்துக்குளம் பஸ் நிறுத்தத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி, சாலையோரம் இருந்த மளிகை கடை மற்றும் ஸ்சுவீட்ஸ் கடை மீது காலை 6 மணிக்கு மோதியது. இந்த விபத்தில் கடைகளின் முன்பகுதி சேதம் அடைந்தது. அதே போல் லாரியின் கேபின் முற்றிலும் சேதம்அடைந்தது.லாரியை ஓட்டி வந்த ஆறுமுகத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது கடைகள் திறக்கப்படவில்லை. கடைகள் மீது லாரி மோதியதும், டமார் என்று சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அப்போது லாரியின் கியாஸ் நிரப்பட்ட சிலிண்டர்கள் இருந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சிலிண்டர்களில் இருந்து கியாஸ் கசிந்து இருந்தால் மிகப்பெரிய விபரீதம் நடந்து இருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும நடக்கவில்லை.
மாற்று ஏற்பாடு
இது குறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலிண்டர்களை எடுத்து செல்ல மாற்று ஏற்பாடு செய்தனர். இதனால் இந்த பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் சேதமும் ஏற்படவில்லை அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
---
2 காலம்
கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கடைகள் மீது மோதி நிற்கும் காட்சி.