திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து பா.ஜ.க.வினர் போராட்டம்
போடியில் திருவோடு ஏந்தி பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
தேனி
போடி நகராட்சி பகுதியில், பா.ஜ.க. சார்பில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். போடி நகராட்சியில் மக்களுக்கு நலப்பணிகள் செய்ய போதிய நிதி இல்லை என கூறி பா.ஜ.க.வினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு முன்பு தொடங்கிய போராட்டம் நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சென்றனர். நகராட்சி அலுவலகம் சென்ற அவர்கள், அங்கு நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் இல்லாத காரணத்தால் வரவேற்பு அறையில் தாங்கள் பிச்சை எடுத்த பணத்தை கொடுத்து விட்டு சென்றனர்.
Related Tags :
Next Story