சத்தியமங்கலத்தில் தீப்பந்தம் ஏந்தி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சத்தியமங்கலத்தில் தீப்பந்தம் ஏந்தி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டம்

ஈரோடு

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு 7 மணியளவில் ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தீப்பந்தம் ஏந்தி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்து அவர் மீது பா.ஜ.க. அரசு அடக்குமுறையை ஏவி வருவதாக கூறி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மாவட்ட தலைவர் குலசேகரன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத்தலைவர் நரேந்திர தேவ், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் எல்.முத்துக்குமார், மாநில செயலாளர் குறிஞ்சி சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் வினோத், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தேவராஜ், முத்துசாமி, பவானிசாகர் ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி முத்துசாமி உள்பட பவானிசாகர், அந்தியூர், கோபி பகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.


Next Story