கோவில் முன்பு கேட்பாரற்று நிற்கும் 2 கார்கள்
திருப்பூர்
கோவில் முன்பு கேட்பாரற்று நிற்கும் 2 கார்கள்
திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையத்தில் மாநகராட்சி 2-வது மண்டல பழைய அலுவலக கட்டிடம் முன்பு கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன் பகுதியில் 2 கார்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக கேட்பாரற்று நிற்கிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனாலும் போலீசார் அந்த கார்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எடுக்கவில்லை. எனவே உடனடியாக அங்கு நிறுத்தப்பட்டுள்ள 2 கார்களும் யாருடையது? எதற்காக அங்கு நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story