கார்கள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
பார்வதிபுரத்தில் கார்கள் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
பார்வதிபுரத்தில் கார்கள் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் நேற்று காலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காரின் முன்னால் மற்றொரு காரும், அரசு பஸ்சும் சென்றது. திடீரென மாடு குறுக்கே வந்ததால், டிரைவர் அரசு பஸ்சை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த காரும் பஸ் பின்னால் நின்றது. ஆனால் அந்த காரின் பின்னால் வந்த மற்றொரு கார், முன்னால் நின்ற கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் முன்னால் சென்ற கார், அரசு பஸ் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் கார்களின் முன் மற்றும் பின் பகுதிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.