கிருஷ்ணகிரி அருகே, இருதரப்பினர் மோதல்; போலீஸ்காரர் உள்பட 12 பேர் மீது வழக்கு


கிருஷ்ணகிரி அருகே, இருதரப்பினர் மோதல்; போலீஸ்காரர் உள்பட 12 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 July 2023 1:00 AM IST (Updated: 18 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி,:

கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 57), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா (43), போலீஸ்காரர். உறவினர்களான இவர்கள் இருவரின் நிலமும் அருகருகே உள்ளது. இவர்களுக்குள் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 16-ந் தேதி அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் கோவிந்தராஜிம், அவரது தரப்பில் முருகன் (44), மாரியப்பன் (44), பிரவீன்குமார் (23) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ்காரர் ராஜா, தேவராஜ், சின்னராஜ் உள்பட 4 பேர் மீது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே போல ராஜா கொடுத்த புகாரின் பேரில், கோவிந்தராஜ் (57), முருகன் (44), பிரவீன்குமார் (23), மாரியப்பன் (44) உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story