ராயக்கோட்டை அருகேதாயை தாக்கியதாக வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு
ராயக்கோட்டை,:
ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளாரி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சென்றாயன். இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 50). விவசாயி. இவர் கடந்த 25-ந் தேதி காலை தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய மகன் கோவிந்தராஜ் (30) அங்கு சென்று தாயிடம் செலவுக்கு பணம் கேட்டார். அதற்கு பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் தனது தாயை கோவிந்தராஜ் குழாயால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், ராயக்கோட்டை போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் கோவிந்தராஜின் மனைவி பார்வதி (22) ஒரு புகார் கொடுத்தார். அதில் தான் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் முனியம்மாள் மற்றும் ஜனனி (22) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.