நிபந்தனை ஜாமீனில் வந்துகோர்ட்டில் ஆஜராகாத 48 பேர் மீது வழக்கு


நிபந்தனை ஜாமீனில் வந்துகோர்ட்டில் ஆஜராகாத 48 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 July 2023 1:00 AM IST (Updated: 28 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் கைதாகி கோர்ட்டில் நிபந்தனை ஜாமீனில் வந்த 48 பேர் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமலும், நிபந்தனை உத்தரவை பின்பற்றாமலும் இருந்து வந்தனர். இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை, ஓசூர் டவுன், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி தாலுகா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story