முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Aug 2023 1:00 AM IST (Updated: 28 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி ரெயில் நிலைய காலனி பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பேட்டா என்கிற கரியன் (வயது 19) என்பவர் அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாத்தா, ரவிக்குமார் என்பவரிடம் கூறினார். அவர் பேட்டா என்கிற கரியனை கண்டித்தார்.

இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு ரவிக்குமாரை, கரியன் தரப்பினர் தாக்கினர். இதுகுறித்து ரவிக்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கரியன், தனுஷ் (21), மோகன் (26) மற்றும் ஒருவர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story