கிருஷ்ணகிரி மாவட்டத்தில்மக்கள் நீதிமன்றம் மூலம் 1,477 வழக்குகளில்ரூ.7½ கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,477 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1.477 வழக்குகளில் ரூ.7½ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சுமதி சாய் பிரியா முன்னிலை வகித்தார். இதேபோல் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், வங்கிக்கடன் வழக்குகள், காசோலை, நிதி நிறுவனம், பாகப்பிரிவினை வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
அதன்படி 1,477 வழக்குகளில் ரூ.7 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரத்து 102-க்கு தீர்வு காணப்பட்டது. மேலும் குடும்ப நல வழக்கில் இணைந்த ஜோடிக்கு மலர்களையும், பாகப்பிரிவனை வழக்கில் இணைந்த குடும்பத்திற்கு இனிப்புகளை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்.
ஏற்பாடு
இதில் குடும்பநல நீதிபதி நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, சிறப்பு சார்பு நீதிபதி அஷ்வஹ் அகமது, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர், மாவட்ட உரிமையியல் நீதிபதி யுவராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தது.