முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டு; 8 பேர் மீது வழக்கு
முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டு; 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சாயல்குடி,
சாயல்குடி மாதவன் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது55). இவரும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரும் வெளிநாட்டில் வேலை செய்ய கடந்த 2011-ம் ஆண்டு சென்றுள்ளனர். டிரைவரான கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு சென்ற 3 மாதத்தில் கார் விபத்தில் இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு உடலைஅனுப்பி வைக்க நாகராஜ் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் நாகராஜ் செலவழித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் போதெல்லாம் கிருஷ்ண மூர்த்தியின் மனைவி மாணிக்க செல்வியிடம் நாகராஜன் பணத்தை கேட்டுள்ளார். இதுதொடர்பாக தகராறு இருந்துவந்தது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மாணிக்க செல்வி மற்றும் அவரது உறவினர்களான அம்பிகா, பழனி முருகன், ராமாயி, முனீஸ்வரன், காளீஸ்வரன், ராம பாண்டி, ஜெகதீஸ்வரன் ஆகிய 8 பேரும் சேர்ந்து நாகராஜனை அரிவாளால் வெட்டி, ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நாகராஜன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ் பெக்டர் சாலமன் ஆகியோர் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.