கணவர், மாமியார் மீது வழக்கு
கணவர், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள பாலையூரை சேர்ந்த நாகவள்ளிக்கும், (வயது 32), அதே ஊரை சேர்ந்த ராம்குமார் (34) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 19 பவுன் நகைகள் ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. ராம்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். வருடத்திற்கு ஒருமுறை வந்து செல்வார். அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் நாகவள்ளியிடம் நீ கொண்டு வந்த சீர் பொருட்கள் போதாது மேலும் 5 லட்சம் பணம் வேண்டும், கார் வேண்டும் உன் வீட்டில் வாங்கி வந்தால்தான் என்னோடு சேர்ந்து வாழ முடியும் என்று துன்புறுத்தினாராம். இதற்கு அவரது தாய் சீதையும் உடந்தையாக இருந்தாராம். இதுகுறித்து நாகவள்ளி காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராம்குமார் மற்றும் அவரது தாய் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.