அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க. பிரமுகர் ரகளை


அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க. பிரமுகர் ரகளை
x

அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க. பிரமுகர் ரகளையில் ஈடுபட்டார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் உலகப்பன் (வயது 42). தி.மு.க. பிரமுகரான இவர் தனக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக கானாடுகாத்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு ஊசி போடும் போது அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம். இதனால் இப்படி செய்தால் நான் எப்படி ஊசி போடுவது என செவிலியர் கேட்டுள்ளார். அப்போது செவிலியருக்கும், உலகப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரகளையில் ஈடுபட்ட அவர் செவிலியரை தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை டாக்டர் தேவகுமார் கொடுத்த புகாரின் பேரில், செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story