அனுமதியின்றி மஞ்சுவிரட்டு; 5 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள வடக்கு வாசல் செல்வி அம்மன் திருவிழாவையொட்டி நேற்று அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் மாடுமுட்டியதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திருக்கோஷ்டியூர் குரூப் வி.ஏ.ஓ. நல்லழகு கொடுத்த புகாரின் பேரில், ஊத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பையா அம்பலம் (வயது 65), சுரேஷ் (38), செல்வராஜ் (60), முத்து (45), போஸ் (67) ஆகிய 5 பேர் மீது திருக்கோஷ்டியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story