நாகரசம்பட்டி அருகே இருதரப்பினர் தகராறில் 8 பேர் மீது வழக்கு


நாகரசம்பட்டி அருகே  இருதரப்பினர் தகராறில் 8 பேர் மீது வழக்கு
x

நாகரசம்பட்டி அருகே இருதரப்பினர் தகராறில் 8 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி அருகே உள்ள சந்திரம்பட்டியை சேர்ந்தவர் மயிலாவதி. இவருடைய மகன் கோவிந்தசாமி (வயது 30). இவர்களுடைய உறவினர் மணிகண்டன் (30). கோவிந்தசாமி சென்னையில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், உறவினர் கிருஷ்ணன் மகள் ஷன்மதி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஊரில் நடக்கும் திருவிழாவில் பங்கேற்க கோவிந்தசாமி மனைவியுடன் ஊருக்கு வந்தார். அப்போது ஷன்மதி கணவரிடம் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு கணவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் ஷன்மதியை கணவர் தாக்கினாராம். இதனை ஷன்மதி தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து ஷன்மதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவிந்தசாமியிடம் கேட்டனர்.

அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தசாமி, அவருடைய தாய் மயிலாவதி தாக்கப்பட்டனர். இதுகுறித்து மயிலாவதி கொடுத்த புகாரின்பேரில் நாகரசம்பட்டி போலீசார் மாணிக்கம் (30), சக்திவேல் (26), ஆறுமுகம் (50), கிருஷ்ணன் (52) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் வைரன் (55), கோவிந்தசாமி (30), சின்னதம்பி (23), வடிவேல் (25) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story