போலி அடையாள அட்டை வைத்திருந்த பெண் மீது வழக்கு
போலி அடையாள அட்டை வைத்திருந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை
நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன். இவர் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது:- திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி.பி.ஓ. பதவியில் இருப்பதாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) என்று கையெழுத்து போட்ட அடையாள அட்டை வைத்துள்ளார். மேலும் அவர் எங்கள் குடும்பத்தாரிடம் பிரச்சினை செய்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story