தர்மபுரி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது வழக்கு
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அணையின் உபரி நீரை கடகத்தூர், சோகத்தூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பச்சனம்பட்டி கூட்டு ரோடு அருகே நேற்று முன்தினம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பெண்கள் உள்பட 150 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story