கஞ்சா விற்றவர் மீது வழக்கு
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள தேவரசம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அதியமான்கோட்டைபோலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரிந்தது. மேலும் அவரிடம் விசாரித்தபோது அவர், அதே பகுதியை சேர்ந்த சிவாஜி (வயது 55) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story