கடத்தூர் அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


கடத்தூர் அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தார். அப்போது கேத்துரெட்டிப்பட்டியை சேர்ந்த காவேரி (32), பூவரசன் (23) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் செல்வியிடம், உனது மகன் எங்கே? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வி கடத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், காவேரி, பூவரசன் ஆகிய 2 மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story