நகராட்சி பெண் அதிகாரியை மிரட்டியவர் மீது வழக்கு


நகராட்சி பெண் அதிகாரியை மிரட்டியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி பெண் அதிகாரியை மிரட்டியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிவகங்கை

நகராட்சி பெண் அதிகாரியை மிரட்டியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சிவகங்கை பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான கடைகளில் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகராட்சியின் நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலர் திலகவதி தலைமையிலான ஊழியர்கள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வரி கட்டாத கடைகளுக்கு சீல் வைத்ததுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அங்கு வந்த நகராட்சி ஒப்பந்ததாரர் சுந்தரபாண்டி என்பவர் நகரமைப்பு அலுவலர் திலகவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சுந்தரபாண்டியன் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story