வனத்துறையினர், கிராம மக்களிடையே தகராறு: ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


வனத்துறையினர், கிராம மக்களிடையே தகராறு: ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள சஜ்ஜலஅள்ளி கிராமத்தில் கடந்த 22-ந் தேதி விளை நிலத்தில் 2 காட்டு யானைகள் புகுந்தன. அந்த யானைகளை துரத்தும் பணி மெத்தனமாக நடப்பதாக கூறி கிராம மக்கள், வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களுக்கும், வனத்துறையினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தாக்கப்பட்டார். இதனால் கிராம மக்கள் வனத்துறையினரை சிறைபிடித்தனர். அப்போது அங்கு வந்த வனவர் கனகராஜூம் தாக்கப்பட்டார். இதுகுறித்து கிராம மக்கள், வனத்துறையினர் பாப்பாரப்பட்டி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, வனத்துறை ஊழியர் ஒருவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தற்போது தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story