இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை கிரயம் செய்த 2 பேர் மீது வழக்கு


இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை கிரயம் செய்த 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரத்தை சேர்ந்தவர்கள் காந்தி (வயது 60), தருமன் (60). இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் இறப்பு சான்றிதழை போலியாக தயாரித்து, நிலத்தை கிரயம் செய்துள்ளனர். இதுகுறித்து பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் காந்தி, தருமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story