மாரண்டஅள்ளி பேரூராட்சி சுகாதார வளாகத்தில் கழிவுகளை அகற்ற கூறிய காவலாளி மீது வழக்கு


மாரண்டஅள்ளி பேரூராட்சி சுகாதார வளாகத்தில் கழிவுகளை அகற்ற கூறிய காவலாளி மீது வழக்கு
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி பேரூராட்சி 15-வது வார்டில் பொது சுகாதார வளாகம் உள்ளது. இதில் கடந்த அக்டோபர் மாதம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 2 பேர், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல், கைகளால் மனித கழிவுகளை அகற்றினர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்துக்கு புகார் சென்றது. அதன்பேரில் ஆணைய தலைவர் வெங்கடேசன் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகள், தூய்மை பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், பேரூராட்சி இரவு காவலாளியும், துப்புரவு மேற்பார்வையாளருமான (பொறுப்பு) சங்கர் (வயது 45), தூய்மை பணியாளர்களை மனித கழிவுகளை அகற்ற கூறியது தெரியவந்தது. பின்னர் அவர் தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து தூய்மை பணியாளர்களை மனித கழிவுகளை அகற்ற கூறிய இரவு காவலாளி சங்கர் மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story