கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்ற 4 பேர் மீது வழக்கு


கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்ற 4 பேர் மீது வழக்கு
x

சூளகிரி பகுதியில் கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

மும்பையை சேர்ந்தவர் மணிமாறன். பிரபல தனியார் நிறுவன அதிகாரி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அதில் பிரபல நிறுவனத்தின் பெயரில் கலப்பட டீத்தூள் மற்றும் சோப்புதூள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. சூளகிரி பகுதியில் 4 கடைகளில் கலப்பட டீத்தூள், சோப்புத்தூள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அதிகாரி மணிமாறன் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து, 4 கடைகளில் இருந்தும் ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள டீத்தூள், சோப்புத்தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த கவுதம்ராஜ் (வயது24), சிவா (23), ஏனுசோனை முனிராஜ் (44), அட்டரகானப்பள்ளி நாகராஜ் (38) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story