தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய 6 பேர் மீது வழக்கு


தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய 6 பேர் மீது வழக்கு
x

ஓசூரில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் ஆசிரியர் காலனி அருகே சப்தகிரி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது38). தனியார் நிறுவன ஊழியர். இவர், ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த செந்தில்குமாரிடம் கடந்த 2017-ம் ஆண்டு ஆர்.சி. சர்ச் அருகே நிலம் வாங்கி உள்ளார். இந்த நிலையில் சிவபிரகாஷ் அங்கு வீடு கட்டும் பணிகளை மேற்கொண்டார். அப்போது, செந்தில்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் நண்பர்கள் மூலம் சிவபிரகாசுக்கு மிரட்டல் விடுத்து ஸ்டோர் ரூம் கதவையும் சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், செந்தில்குமார் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story