கோழித்தீவன வியாபாரிக்கு கொலை மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு
புதுச்சத்திரம் அருகே கோழித்தீவன வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாமக்கல்
புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டி, குடித்தெரு வயக்காட்டைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (வயது 39). இவர் விவசாயம் மற்றும் கோழி தீவனத்திற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இந்த வகையில் ஆத்தூரை சேர்ந்த தனியார் நிறுவனர் கலைச்செல்வன் என்பவரிடம், மக்காச்சோளம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
இவர்களுக்குள் பொருட்கள் வாங்கியது மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கலைச்செல்வன், கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சத்திரம் அருகே செங்கோட்டுவேலை சந்தித்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செங்கோட்டுவேல் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story