பஸ் டிரைவரை தாக்கிய 10 பேர் மீது வழக்கு


பஸ் டிரைவரை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
x

பஸ் டிரைவரை தாக்கிய 10 பேர் மீது வழக்கு

விருதுநகர்

காரியாபட்டி

நரிக்குடி, நாலூர் வழியாக அருப்புக்கோட்டையிலிருந்து மானாமதுரைக்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தனியார் பஸ்சை அருப்புக்கோட்டை பெரிய தெரு பகுதியை சேர்ந்த முத்துவேல்(வயது 43) ஓட்டினார். பஸ் நாலூர் சீனிமடை அருகே வந்து கொண்டிருந்தபோது சிலர் ரோட்டில் பிரச்சினை செய்து கொண்டிருந்தனர்.

இதை பார்த்த டிரைவர் பஸ்சை ஒரமாக ஓட்டிய போது பச்சேரி பகுதியை சேர்ந்த முருகன், ராஜ்குமார்(33), கணேசன்(30), உதயபிரபு (28) உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் திடீரென பஸ்சை வழிமறித்து முத்துவேலை சரமாரியாக தாக்கினர். மேலும் பஸ்சின் முன்பகுதியை சேதப்படுத்தினர். இதுகுறித:து பஸ் டிரைவர் முத்துவேல் கட்டனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், பச்சேரி பகுதியை சேர்ந்த முருகன், ராஜ்குமார் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story