ஓட்டலை சூறையாடிய 10 பேர் மீது வழக்கு
ஆலங்குடி அருகே ஓட்டலை சூறையாடிய 10 பேர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓட்டல்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கடுக்கக்காட்டை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் திருமணஞ்சேரியை சேர்ந்த யேனப்ராஜ் (வயது 40) என்பவர் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ஓட்டலுக்கு உணவு அருந்த செம்பட்டிவிடுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன், சிவா, வடவாளம் ஊராட்சி கீழக்காட்டை சேர்ந்த கருப்பையா மகன் பழனிவேலு, மாந்தங்குடி ராமு உள்பட 10 பேர் மது போதையில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
10 பேர் மீது வழக்கு
அப்போது 10 பேரும் சேர்ந்து உணவு வேண்டும் என்று பரோட்டோ மாஸ்டரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் உணவு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் உள்பட 10 பேரும் சேர்ந்து பரோட்டா மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். மேலும் ஓட்டலை அடித்து சூறையாடி உள்ளனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்த பரோட்டா மாஸ்டரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஆரோக்கியராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பரோட்டா மாஸ்டரை தாக்கி, ஓட்டலை அடித்து ெநாறுக்கியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.