விதிமீறிய 103 வாகன ஓட்டிகள் மீது வழக்கு


விதிமீறிய 103 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 May 2023 5:00 AM IST (Updated: 18 May 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் விதிமீறிய 103 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் போலீசார் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரி-குன்னூர் சாலையில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், பகல் நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் என 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு மொத்தம் ரூ.46 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் போலீசாரின் வாகன தணிக்கையில் போக்குவரத்து விதிகளை மீறிய 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.46 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறிய 103 வாகன ஓட்டிகளுக்கு ரூ.92 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது உள்ளது. மேலும் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகரித்து உள்ளதால், மலைப்பாதையில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உளள்னர்.


Next Story