சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 12 பேர் மீது வழக்கு
பி.முட்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடலூர்
புவனகிரி,
பெண்களை இழிவாக பேசிய தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பா.ஜ.க. மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து பரங்கிப்பேட்டை பா.ஜ.க. சார்பில் வக்கீல் பிரிவு செயலாளர் மணிமாறன் தலைமையில் பா.ஜ.க.வினர் பி. முட்லூர் சிதம்பரம்-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக வக்கீல் பிரிவு செயலாளர் மணிமாறன் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story