வாழப்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்கு-ரூ.22 ஆயிரம், சீட்டு கட்டுகள் பறிமுதல்


வாழப்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்கு-ரூ.22 ஆயிரம், சீட்டு கட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Jun 2023 3:30 AM IST (Updated: 6 Jun 2023 3:00 PM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ரூ.22 ஆயிரம், சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

சேலம்

வாழ்ப்பாடி:

வாழப்பாடி அருகே முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை அருகே 12 பேர் சீட்டு கட்டு வைத்து சூதாடுவதாக வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட இளவரசன் (வயது 36), செந்தில்குமார் (43), முருகன் (40) ஆனந்த் (40), மணிகண்டன் (30), திலீப் (40) வினோத் (33), மணிகண்டன் (32) சிவக்குமார் (30), பிரகாஷ் (34), ஜீவா (32), மலை முருகன் (28) ஆகிய 12 பேரையும் கைது செய்து அவரிடமிருந்து 22 ஆயிரத்து 40 ரூபாய் மற்றும் 2 சீட்டு கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தனர்.


Next Story