சாலை மறியலில் ஈடுபட்ட 129 பேர் மீது வழக்கு
ராஜபாளையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 129 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே மேலப்பட்ட கரிசல்குளம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி கோவில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு அறிவாள் வெட்டு விழுந்தது.இதையடுத்து மதுரை மெயின் சாலையில் சம்பவத்தன்று மறியல் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மறுநாள் மதியம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பும் போக்குவரத்துக்கு இடையூறாக மறியல் நடந்தது.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாகவும் ஒன்று கூடியது என இரு பிரிவுகளில் ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வசந்தன், பொதுச் செயலாளர் விஸ்வை குமார், மற்றும் 84 பெண்கள் உள்ளிட்ட 129 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story