14 பேர் மீது வழக்கு


14 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 April 2023 12:30 AM IST (Updated: 3 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை கோவில் திருவிழா தகராறு தொடர்பாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியில் விநாயகர் கோவில் உள்ளது. இதில் யார் பூசாரிகளாக செயல்படுவது என்று இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி கோவில் திருவிழா தொடங்கியது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பூமிராஜ் (வயது 55) மற்றும் அவர் தரப்பினர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர் தரப்பைச் சேர்ந்த தனபால் (49) மற்றும் சிலர் சாமி கும்பிட வந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பூமிராஜ், சின்ராஜ், மோதிலால், தனபால் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் வடமதுரை போலீசில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் இரு தரப்பையும் சேர்ந்த தனபால், தனசேகரன், சண்முகவேல், சின்ராஜ், மோதிலால், பாலமுருகன் உள்பட 14 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story