தாய், மகன் உள்பட 190 பேர் மீது வழக்கு


தாய், மகன் உள்பட 190 பேர் மீது வழக்கு
x

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய தாய், மகன் உள்பட 190 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி, ஜூன்.8-

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, லால்குடியை சேர்ந்த அரவிந்த்ராஜ் (வயது 26), தனது தாயார் சரஸ்வதியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபோல் செங்காட்டுபட்டியில் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கேட்டு போராட்டம் நடத்தினர். மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப்பணியாளர்கள் சங்கத்தினரும், நெல்லை போலீசாரை கண்டித்து மக்கள் தேசம் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி தாய், மகன் உள்பட 190 பேர் மீது செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story