சாமி கும்பிட வந்த முதியவரை தாக்கிய 2 தீட்சிதர்கள் மீது வழக்கு


சாமி கும்பிட வந்த முதியவரை தாக்கிய 2 தீட்சிதர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நடராஜா் கோவிலில் சாமி கும்பிட வந்த முதியவரை தாக்கிய 2 தீட்சிதர்கள் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்

கடலூர்

சிதம்பரம்

சாமி ஊர்வலம்

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி சாலை தெருவை சேர்ந்தவர் கார்வண்ணன்(வயது 61). இவர் நேற்று முன்தினம் சாமி ஊர்வலம் வந்த போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 21 படி அருகே நின்று தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கனகசபாபதி, ஸ்ரீ வர்சன் ஆகிய தீட்சிதர்கள் இருவரும் அங்கு நின்ற கொண்டிருந்த கார்வண்ணனை தள்ளி போ என்று கூறியபடி நெட்டி தள்ளியதாக கூறப்படுகிறது.

முதியவர் மீது தாக்குதல்

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தீட்சிதர்கள் இருவரும் கார்வண்ணனை தாக்கினர்.

பின்னர் இது குறித்து கார்வண்ணன் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தீட்சிதர்கள் கனகசபாபதி, ஸ்ரீவர்சன் ஆகியோர் மீது சிதம்பர நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி தரிசனம் செய்த முதியவரை தீ்ட்சிதர்கள் தாக்கிய சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story