செம்மண் கடத்த முயற்சி் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்கு


செம்மண் கடத்த முயற்சி் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே செம்மண் கடத்த முயற்சி் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்கு பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி பறிமுதல்

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள கீழ் மாவிலங்கை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் முனியப்பன்(வயது 45). இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கல்பாக்கம் கிராமத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கே மர்மநபர்கள் சிலர் அரசு புறம்போக்கு நிலத்தில் செம்மண் கடத்த முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்து தடுத்து நிறுத்தினார். பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் அருள்ராஜ்(30), திண்டிவனம் ஆசூர் கிராமம் பொக்லைன் எந்திர டிரைவர் முருகன்(32) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story