முதியவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
முதியவரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர்
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன்(வயது 67). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் தனவேலின் மகன் கண்ணனுக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணன் மற்றும் அவரது உறவினர் வெங்கடேசன் ஆகியோர் சின்னையனிடம் பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் 2 பேர் மீது உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story