அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
லால்குடியை அடுத்த மணக்கால் பழைய தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). இவர் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரின் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது வக்கீல்கள் சாமுவேல் லவ்ஜாய் (45), சரவணன் (39) ஆகியோர் அங்கு வந்தனர். இதனிடையே சாமுவேலின் கையில் இருந்த காயத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனை அவர் மாவட்ட வருவாய் அலுவலரின் காரில் துடைத்து காரை அசுத்தப்படுத்தினார். இதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதுகுறித்து செசன்சு கோர்ட்டு போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story