ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்கு


ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 July 2023 1:30 AM IST (Updated: 10 July 2023 5:27 PM IST)
t-max-icont-min-icon

மனைவியை அடித்து துன்புறுத்தியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேனி

போடி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். ராணுவ வீரர். இவரது மனைவி திவ்யநந்தா (வயது 28). இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் திவ்யநந்தா போடி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அரவிந்த் அடித்து துன்புறுத்தியதாகவும், இதுகுறித்து அவரது தந்தை குமாரிடம் கூறியபோது அவரும் அடித்ததாகவும், மேலும் 3¼ பவுன் நகையை அரவிந்த் வாங்கி கொண்டு திருப்பி தரவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதன்பேரில் அரவிந்த் மற்றும் அவரது தந்தை குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story