பணம் கொடுத்தவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


பணம் கொடுத்தவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x

பணம் கொடுத்தவரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள திருப்பாத்தியூரை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 40). இவரிடம், ஈச்சங்காட்டுப்பட்டியை சேர்ந்த பொன்னம்பலம் மனைவி மணிமேகலை (32) என்பவர் கடனுக்கு பணம் வாங்கி உள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் மணிேமலையின் வீட்டிற்கு சென்று அவரிடம் பூமிநாதன் தான் கொடுத்த பணத்ைத கேட்டுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மணிமேகலை, பூமிநாதனை தகாதவார்த்தையால் திட்டியுள்ளார். பின்னர் தனது உறவினரான மணி (42) என்பவரை அங்கு வரழைத்தார். இதையடுத்து பூமிநாதனை, மணியும் தகாத வார்த்தையால் திட்டி கட்டையால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பூமிநாதன் தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் மணி, மணிமேகலை ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story