வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பட்ட காட்டாங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 22). மேல தெருவை சேர்ந்தவர் சேகர் (42). உறவினர்களான இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் பட்ட காட்டங்குறிச்சியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே ரஞ்சித்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேகர் மற்றும் அவரது நண்பர் சம்பந்தம் ஆகியோர் ரஞ்சித்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் ரஞ்சித்குமாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேகர் மற்றும் சம்பந்தம் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்.