பெண்ணின் வீட்டை சூறையாடிய 2 பேர் மீது வழக்கு
பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் பெண்ணின் வீட்டை சூறையாடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
வடகாடு அருகேயுள்ள புள்ளான்விடுதி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி கவிதா (வயது 34). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் (30) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுபாஷ் தனது நண்பர்களுடன் கவிதா வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டில் இருந்த டி.வி., ஸ்கூட்டர், செல்போன், ஜன்னல் ஆகியவற்றை உடைத்து சூறையாடினர். அப்போது கவிதாவுக்கு உதவ வந்த முருகவேல் என்பவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த முருகவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து முருகவேல் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ், வைரவமூர்த்தி ஆகியோர் மீது வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story