மணல் திருடிய 2 பேர் மீது வழக்கு
மணல் திருடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் செல்லாண்டிபாளையம் அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் திருடப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மாட்டுவண்டியில் மணல் திருடி கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து மணல் திருடியதாக கரூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 45), காமராஜ் (55) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story