2 பேர் மீது வழக்கு
கழிவு பொருட்கள் கொட்டுவதற்கு கொண்டு வந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் நேற்று முன்தினம் கழிவு பொருட்களை கொட்ட வந்த டிராக்டரை அந்த பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாநகராட்சி சுகாதார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சுகாதார துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் டிராக்டரை ஓட்டி வந்த நாங்குநேரி தாலுகா ஆழ்வார்நேரி பகுதியை சேர்ந்த சுடலைகண்ணு மகன் தளவாய் (வயது 35), அம்பை தாலுகா வெள்ளாங்குழி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கைலாசம் (37) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story